குமுறும் கோபம் வேடிக்கை பார்க்க முடியாது.! பாலாஜி,சனமின் செருப்பு விவகாரம் குறித்து கமல்.!

Kamal says about Balaji and Sanam's shoe affair that Kumurum Anger can't see the fun.here is the promo video

குமுறும் கோபம் வேடிக்கை பார்க்க முடியாது என்று பாலாஜி மற்றும் சனமின் செருப்பு விவகாரம் குறித்து கமல் கூறுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றி பிக்பாஸ் போட்டியாளர்களை நோக்கி பல கேள்விகளை முன் வைக்கிறார் .அந்த வகையில் வரிசைப்படுத்துதல் டாஸ்க்கில் சனம் நேராக பாலாஜி செருப்பை கழட்டி காண்பித்த விவகாரம் குறித்து தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் கேட்டுள்ளார் .

அதில் இந்த கோவிட் காலத்தில் வெளியே போட்டுக் கொள்வதற்கு ஒரு செருப்பும், வீட்டுக்குள் ஒன்று என இரண்டு செருப்புகள் வைத்து இருக்கின்றார்கள். ஆனால் பாலாஜி 3 செருப்புகள் வைத்துள்ளார். வெளியில் ஒன்று, வீட்டுக்குள் ஒன்று, மூஞ்சில் அடித்துக் கொள்வதற்கு ஒன்று என்று கமல் கூறினார்.

மேலும் சனம் ஷெட்டியை பார்த்து உங்களை அவமானப்படுத்தியதாக நீங்கள் நினைத்தீர்கள், அதை விட எனக்கு பாலாஜி பயமுறுத்தியதாக தோன்றியது என்று கூறினார்.குமுறும் ஒரு கோபமாகத்தான் அது இருந்தது. வயலென்ஸ்ஸின் விளிம்பு அது, இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கமல் கூறினார்.மொத்தத்தில் பாலாஜியை இன்று பல கேள்விகளால் கமல் வறுத்தெடுப்பார் என்று தெரிகிறது.

unknown node