ஒரு நாள் கூட இருக்க முடியாது! ‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய பவா செல்லத்துரை!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 2-வது வாரம் ஆகியுள்ள நிலையில், இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருந்த அனன்யா குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமே அதாவது இந்த வாரம் பவா செல்லத்துரை வெளியேறியுள்ளதாக தகவல்களை வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் வருகை தந்து அகம் டிவி வழியாக முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுபவம் எப்படி இருந்தது மற்றும் நடந்த பஞ்சாயத்து வைத்து கேட்டார். அதில் பெரும்பாலும் விசித்ரா மற்றும் ஜோதிகா இருவருடைய வாக்கு வாதம் பற்றி தான் கமல்ஹாசன் பேசினார்.
பிறகு நேமினேஷனில் இருப்பவர்களை தனியாக அமர கூறிவிட்டு இதில் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என அணைத்து போட்டியாளர்களிடமும் கேட்டார். அதற்கு பவா செல்லத்துரை பெயரை தான் பலரும் கூறினார்கள். ஆனால், குறைவான வாக்குகளை பெற்று அனன்யா முதல் ஆளாக வெளியேறினார்.
இந்த நிலையில், இதுவரை எல்லாரும் நல்ல போட்டியாளர்கள் நம்மளை பற்றி யாரும் கூறை கூறமாட்டார்கள் என நினைத்துக்கொண்டிருந்த பவா செல்லத்துரை பலரும் தான் தான் வெளியேறவேண்டும் என்று யோசிப்பதை தெரிந்துகொண்டார். சற்று வருத்தத்தில் இருந்த அவர் பிக் பாஸிடம் பேசவேண்டும் என்றும் கேட்க பிறகு பிக் பாஸ் அவரை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்தது.
அங்கு சென்ற பவா செல்லத்துரை என்னால் இந்த வீட்டிற்குள் ஒரு நாள் கூட இனிமேல் இருக்க முடியாது என்னை வெளியே அனுப்புங்க என கூறினார். பவா செல்லத்துரை பிக் பாஸிடம் பேசியதாவது ” எனக்கு இவ்வளவு நாள் இந்த போட்டி புரியாமல் இருந்தது இப்பொது தான் புரிகிறது. என்னை மன்னித்துவிடுங்கள் என்னால் மனரீதியாக இனிமேல் ஒரு நாட்கள் கூட இந்த வீட்டில் இருக்கவே முடியாது என கூறினார்.
திடீரென இப்படி சொல்கிறீர்கள் அதற்கு காரணம் என்ன? என பிக் பாஸ் அவரிடம் கேள்வியை கேட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ” நான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தது நாம் ஒரே மாதிரி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் 15 பேரோட புதுமையான வாழ்க்கையாக இருக்கும் என்று தான் நினைத்துக்கொண்டு வந்தேன். ஆனால், இங்கு ஒரு ஒரு நாளில் டாஸ்க் இருக்கிறது. பிறகு மனித மனதிற்குள் குரூரம் இருக்கிறது. அது இந்த வீட்டிற்குள் இருப்பவர்களிடம் வெளிப்படுகிறது.
அது வெளிப்படும் இல்லை என்று நான் சொல்லவில்லை எனக்கு கூட வெளிப்படும் என்று தான் நான் இந்த வீட்டிற்கு வந்தேன். ஆனால், இந்த வீட்டிற்குள் ஒருவரை ஒருவரை கீழ்படுத்தி பேசுவது என நடந்துகொண்டு இருக்கிறது. என்னுடைய கேரியரில் நான் அப்படி இருந்த ஒரு ஆள் கிடையாது. நான் மனித மனசுடைய மேன்மைகளை மட்டுமே படித்து வளர்ந்தவன். எனக்கு இங்கு இருக்கவே ஒரு மாதிரி இருக்கிறது. 1% கூட இங்கு நான் நீடிக்க மாட்டேன்.
எனக்கு உடம்பும் சரியில்லை மன ரீதியாக ஒரு மாதிரி இருக்கிறது. வேறு எந்த தனிப்பட்ட பிரச்னைகள் இல்லை. இங்கு உள்ள அனைவரும் பிள்ளைகள் அப்பாவை பார்த்தால் எப்படி பார்க்குமோ அதை மாதிரி பார்த்துக்கொண்டார்கள். ஆனால், என்னால் இனிமேல் இங்கு இருக்க முடியாது என கூறினார். அதற்கு பிக் பாஸ் உங்களுக்கு நெஞ்சி வலி காரணமாக தான் இங்கு இருந்து உங்களை அனுப்புகிறோம். நீங்கள் இந்த கன்ஃபெஷன் ரூமில் இருந்தே வெளிய செல்லலலாம் என கூற பவா செல்லத்துரை வெளியேறினார்.
இதைப்போலவே, கடந்த பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சியில் தன்னுடைய மகன் மகளை பார்க்க வேண்டும் என்னால் இனிமேல் வீட்டிற்குள் இருக்க முடியாது எனக்கு ஒரு மாதிரி வருகிறது என கூறிவிட்டு ஜி .பி.முத்துவும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.