#BREAKING: நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்..!

Actor Puneet Rajkumar has died after being admitted to a private hospital due to a heart attack.

நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காலமானார்.

கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் (வயது 46) மாரடைப்பு காரணமாக  பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புனித் ராஜ்குமார் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.

புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், ஆனால், ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இதன்பின், புனித் ராஜ்குமாரின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது என்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் தகவல் தெரிவித்த நிலையில், உயிரிழந்தார்.