3 நாட்களில் தலையே சுற்றிபோகும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை!
உலகமே தலையில் தூக்கி கொண்டாடும் இயக்குனர் என்றால் ஸ்டிவன் ஸ்பீல்பர்க். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் ரெடி ப்ளேயர் ஒன் என்ற படம் திரைக்கு வந்தது.
இப்படம் உலகம் முழுவதும் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது, ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இப்படம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதை விட படத்தின் விஷுவல் காட்சிகள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது, இப்படம் 170 மில்லியன் டாலரில் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால். படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 181 மில்லியன் டாலர் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்திய மதிப்பில் எப்படியும் ரூ 900 கோடியை இப்படத்தின் வசூல் தாண்டும்.