கொரோனா பரிசோதனையை புன்னகையுடன் எதிர்கொண்ட  பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்.!

Bollywood actress KatriKatrina Kaif faces the Corona test with a smilena Kaif has shared a video of Corona test on her Instagram page.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா பரிசோதனை செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து சமீபத்தில் படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்கியதை அடுத்து பல பிரபலங்கள் தங்களது படங்களுக்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்டனர் . படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகள் உட்பட அனைவரும் படப்பிடிப்பிற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைப் நேற்று முன்தினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.அவரது மூக்கில் கொரோனா பரிசோதனை செய்த போது முதலில் பயந்த கத்ரீனா,அதன் பின் சிரித்து கொண்டே அதனை எதிர்கொள்கிறார் .அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்ரீனா பகிர,அதனை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருவதோடு , விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த வீடியோ எதையும் புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை ரசிகர்களுக்கு கத்ரீனா கூறுவதாகவும் கூறி வருகின்றனர்.

unknown node