பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.
பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகராக இர்பான் கானின் தாயார் சயீதா பேகம் ஜெய்ப்பூரில் காலமானார். கொரோனா ஊரடங்கு காரணமாக தாயின் இறுதிச்சடங்கிளில் இர்பான் கானால் பங்கேற்க முடியவில்லை.
இந்நிலையில், இர்பான் கான் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இர்பான் கான் 2018ல் இருந்து இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இர்பான் கான் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை பிரபல திரைப்பட இயக்குனர் ஷூஜித் சிர்கார் தனது ட்விட்டரில் பகிரந்துள்ளார்.
unknown node