சென்னை :இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தின் சக நடிகர்கள் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணி முதல் அடுத்த 3 நாட்களுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதனால், தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு இனி அடுத்த மூன்று நாட்களுக்கு கொண்டாட்டம் தான். அவரது சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான “GOAT” அக்டோபர் 3 ஆம் தேதி நெட்ஃபிக்ஸில் ரிலீஸாகிறது.
இதனிடையே, அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த படமான “தளபதி 69”, அக்டோபர் 4 ஆம் தேதி பூஜை விழாவுடன், படப்பிடிப்பு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது, தளபதி 69-ல் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இந்த படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவியது.
unknown nodeஇதில், பாபி தியோல் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அநேகமாக படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளது. கடைசியாக, அவர் ‘அனிமல்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இதுவே இறுதிப் படமாக அமையும் என்பதால், இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
