சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் உண்மை சம்பவம் கலந்த ப்ளூ இன்க்

Director and actress Lakshmi Ramakrishnan is currently directing Blue Ink. The film is said to be an adaptation of a true story.

இயக்குனரும் நடிகையுமாகிய லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தற்பொழுது ப்ளூ இங்க் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை எனும் வாழ்வியல் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட நடிகை மற்றும் இயக்குனர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிகையாக அல்லது இயக்குனராக பிரபலமானதை விட இந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலமாக தான் அதிகம் பிரபலம் ஆனார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் இதுவரை ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, ஹவுஸ் ஓனர் என பல்வேறு தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவரது படங்கள் அனைத்துமே ஒரு தாயின் மன அழுத்தத்தை குறித்ததாகவோ அல்லது காதல் சம்பந்தமாகவும் அதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதியவர்களின் பிரச்சனை, பெண்களின் பிரச்சனை என வாழ்வியல் சம்பந்தமானதாக தான் இருக்கும். அது போல தற்பொழுது இவர் இயக்கத்தில் ப்ளூ இங்க் எனும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தலைப்பாக இந்த நீலம் சிவப்பு எனவும் வைத்துள்ளார். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இளம் பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து பேச இருப்பதாகவும், இந்தப் படத்திற்கான நடிகர் நடிகை தேர்வு தற்போது நடந்து வருவதாகவும் அடுத்த ஆண்டு படப்பிடிப்புக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.