இயக்குனரும் நடிகையுமாகிய லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தற்பொழுது ப்ளூ இங்க் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை எனும் வாழ்வியல் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட நடிகை மற்றும் இயக்குனர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிகையாக அல்லது இயக்குனராக பிரபலமானதை […]
இசைஞானி இளையராஜா பத்ம விபூஷண் விருதை பெற்ற நிலையில் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா அண்மையில் ட்விட்டர் பக்கத்தில் அவர்களது புதிய படத்தை பற்றி பதிவு செய்துள்ளார். அதில் இளையராஜா , யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் சேர்ந்து முதல் முறையாக இசையமைக்க போவதாக கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் பெயர் ‘மாமனிதன்’ என்றும் இதை வை.எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இப்படத்தின் ஹீரோவாக விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர் […]
சுந்தர்.சி இயக்குவதாக இருந்த “சங்கமித்ரா” படம் படப்பிடிப்பு துவங்காமல் தொடர்ந்து கிடப்பில் உள்ளது. அதனால் படம் கைவிடப்பட்டுவிட்டது என செய்தி பரவி வந்தது. இது பற்றி இயக்குனர் சுந்தர்.சி நேற்று விளக்கம் அளித்துள்ளார். ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளேன்” என அவர் கூறியுள்ளார். மேலும், சங்கமித்ராவாக தோனி பட புகழ் நடிகை திஷா பதானி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.