மாஸ்டர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த பில்லா இயக்குனர்..!!

Director Vishnu Varadhan will next direct a film to be produced by XB Film Creators. The film stars Akash Murali, Murali's son and Adarva Murali's younger brother, in the lead role.

இயக்குனர் விஷ்ணு வரதன் அடுத்ததாக XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் முரளியின் மகனும் அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி, கதாநாயகனாக அறிமுகமாகி நடிக்கிறார்.

இயக்குனர் விஷ்ணு வரதன் அடுத்ததாக நடிகர் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளியை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார். அந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறிருப்பதாவது, ” மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்துXB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. பன்முக திறமை வாய்ந்த இயக்குனர். விஷ்ணு இணைவதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நடிகர் முரளியின் மகனும் அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி, கதாநாயகனாக அறிமுகமாகி நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்றும் தெரிவித்துள்ளனர்.

unknown node