பிக் பாஸ் 8 : “ஐயோ முடியல”தடுமாறும் ரவீந்தர்..விரைவில் அடுத்த எலிமினேஷன்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தயாரிப்பாளர் ரவீந்தர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

producer ravinder

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக தொடங்கியுள்ள நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய 1 வாரம் முடிவதற்குள் பரபரப்பான பல விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்திற்குப் பிறகு தான் சண்டைகள், எலிமினேஷன் எனப் பல விஷயங்கள் நடக்கும்.

ஆனால், அது இந்த முறை மிகவும் விரைவாகவே நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் சண்டைகள் நடைபெறவில்லை என்றாலும், எலிமினேஷன் நடைபெற்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். அதாவது நிகழ்ச்சி தொடங்கி ஒரே நாளில் நிகழ்ச்சியிலிருந்து சஞ்சனா கண்ணீருடன் வெளியேறினார்.

நிகழ்ச்சி தொடங்கிய ஒரே நாளில் அவர் வெளியேறியது ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், மேலும் ஒரு போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற்ற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த போட்டியாளர் வேறு யாரும் இல்லை பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் தான்.

ரவீந்தர் வீட்டை விட்டு வெளியேற முக்கியமான காரணமே அவருடைய உடல் நிலை மிகவும் மோசமான காரணத்தால் தான். வீட்டிற்குள் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதால் அவருடைய உடல் நலம் கருத்தில் கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியேற்றவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டிற்குள் இதே மாதிரியான உடல் நலக் குறைவால் இருந்தால் கண்டிப்பாக அவரால் வேலை செய்ய முடியாது அதைப்போல தன்னுடைய விளையாட்டலும் கவனம் செலுத்த முடியாது.

வீட்டில் நடக்கவே முடியாத அளவுக்கு அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. சக போட்டியாளர்கள் அவருக்கு உதவி செய்து நடத்தி அழைத்துச் செல்வது போல வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. எனவே, ரவீந்தர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவாரா? அல்லது வீட்டிற்குள் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி, சிகிச்சை பெற்றுக்கொண்டு விளையாட்டைத் தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்