BIGG BOSS 5 promo 2 : தூங்காதே தம்பி தூங்காதே ....., அபிஷேக்கை கலாய்த்த கமல்!

Kamal said in the second promo that it was the first time Abhishek had heard gunshots at home.

வீட்டில் முதல் முறையாக அபிஷேக்கால் தான் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது என கமல் இரண்டாவது புரோமோவில் கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த நிகழ்வுக்கான இரண்டாவது புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. கமல் வழக்கம் போல போட்டியாளர்களின் அந்த வார நடவடிக்கைகள் குறித்து பேசுகிறார்.

பிரியங்காவை கலாய்த்த கமல், அடுத்ததாக ஆங்கிலம் கற்கும் ஆர்வத்தில் வட்டார மொழியை மறந்து விடுவீர்கள் போல என இமான் அண்ணாச்சியை நக்கல் செய்கிறார். அதன் பின்பு இந்த வீட்டில் முதல் முறையாக துப்பாக்கிச்சூடு வாங்குவதற்கு காரணமானது அபிஷேக் தான் என கூறி தூங்காதே தம்பி தூங்காதே என பாடல் பாடி கலாய்க்கிறார். இதோ அந்த புரோமோ வீடியோ,

unknown node