BIGG BOSS 5 : திருநங்கை நமிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டாரா...? காரணம் இது தானா!

Transgender Namitha Marimuthu has reportedly left the Bigg Boss house due to ill health.

திருநங்கை நமிதா மாரிமுத்து உடல்நல குறைவு காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட 4 பிக் பாஸ் சீசன்களை அடுத்து தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐந்து நாள் நிகழ்ச்சி இதுவரை ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதல் முறையாக இந்த சீசனில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

unknown node

அவர் தான் நடிகையும், மாடல் அழகியுமாகிய நமிதா மாரிமுத்து. இவர் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் தான் தனது வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இந்த உயரத்திற்கு வந்துள்ளேன் என்பதை குறித்து கூறியிருந்தார். இவரது கதை அனைவரையுமே ஒரு நிமிடம் கலங்க வைத்த நிகழ்வாகவே இருந்தது. நமிதா மாரிமுத்து அவர்களுக்கு ரசிகர் பட்டாளமும் தற்போது அதிகரித்துள்ளது.

unknown node

இந்நிலையில் நேற்று நமிதாவுக்கும் தாமரைச்செல்விக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்ட நிலையில், நமிதா சற்று கோபப்பட்டார். அதன் பின்னதாக சாதாரணமாக அனைவரிடமும் நமிதா நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தற்பொழுது இன்றைய சிறப்பு நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியிடப்பட்ட நிலையில் அந்நிகழ்ச்சியில் நமிதா மாரிமுத்து காண்பிக்கப்படவில்லை.

unknown node

எனவே அனைவரும் நமிதா மாரிமுத்து எங்கே என்ற கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் நமிதா மாரிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து முழுவதுமாக தெரியாவிட்டாலும், அவர் தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம்.