சர்வதேச கிரிக்கெட்டில் மிக முக்கியமான ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று ஐசிசி அறிவித்துள்ளது. விளையாட்டின் ஒருமைப்பாட்டை பராமரிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால், பெண்கள் கிரிக்கெட்டில் இனி திருநங்கைகள் விளையாட முடியாது. அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அறிவிப்பானது சர்வதேச பெண்கள் விளையாட்டின் நேர்மை மற்றும் […]
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, முன்னாள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தனர். இந்த வாக்குறுதியை நிறைவேற்ற காலதாமதமாகி வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து, செப்.15-ஆம் தேதி மகளிருக்கு ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடியே, தகுதி வாய்ந்த மகளிருக்கு ரூ.1000 வழங்கும், […]
அரசு வேலைகளில் 3-ஆம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்று இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மொண்டல் கூறியுள்ளார். இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மொண்டல் , தனது சமூக உறுப்பினர்களுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு தேவை என்று கூறியிருக்கிறார். மொண்டல் தனது சமூகத்திற்கும் நாட்டில் போதுமான எண்ணிக்கையில் தங்குமிடங்கள் தேவை என்றும், இது தொடர்பாக அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவது மிகவும் முக்கியம். […]
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில்,திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமா அவர்களுக்கு,25 ஆண்டுகால சேவையை பாராட்டி 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்துள்ளார்.மேலும்,விருதுடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் முதலைமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை […]
திருநங்கை நமிதா மாரிமுத்து உடல்நல குறைவு காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட 4 பிக் பாஸ் சீசன்களை அடுத்து தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐந்து நாள் நிகழ்ச்சி இதுவரை ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதல் முறையாக இந்த சீசனில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்து […]
விஜய் தொலைக்காட்சிக்கும், பிக்பாஸ் சீசன் 5 தேர்வு குழுவுக்கு பாராட்டு தெரிவித்த ஆரி அர்ஜுனன். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடமாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்கள். இந்த பிக்பாஸ் சீசன் 5-ல் முதலாவதாக கானா பாடகி இசை வாணியும், இரண்டாவது போட்டியாளராக சீரியல் நடிகர் […]
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இட ஒதுக்கீடு பெற ஏதுவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 3 ஆம் பாலினத்தவர்களான திருநங்கைகளை சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி,மத்திய சமூக நீதித்துறை ஓபிசி பட்டியலில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. கல்வி,வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டின்கீழ் திருநங்கைகள் பயனடையும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Centre has moved […]
திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்ள்ளார். இந்நிலையில், திருநங்கைகள் பயன்பெறும் வண்ணமாக, திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணை இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட நான்காயிரம் ரூபாய் நிவாரணத் தொகை இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவருக்கும் நிவாரண தொகையாக 2000 ரூபாய் ஏற்கனவே முதல் தவணையில் வழங்கப்பட்டிருந்த நிலையில் […]
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் கொரோனா நிவாரண தொகையாக தமிழக அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நான்காயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவராகிய அனைத்து திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் […]
கொரோனா வைரஸ் பாதித்ததால் உறவினர்கள் முன்வந்து உதவாத சூழ்நிலையில் திருநங்கை கலைக்குழுவை சேர்ந்த சமீரா எனும் திருநங்கை கர்ப்பிணிப் பெண்ணிற்கு உதவியுள்ளார்.அந்த பெண்ணிற்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. கொரோனா வைரஸின் தீவிரம் தற்போது மிக அதிகமாக பரவி வரும் நிலையில் உறவுகள் என்ற நிலையையும் கடந்து பலர் தங்களது சொந்தப் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு கூட உதவ தயக்கம் காட்டுகின்றனர். தங்களுக்கு கொரோனா தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் அருகில் செல்வதற்கு குடும்பத்தினரே […]
சென்னையை சேர்ந்த 50 திருநங்கைகள் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக ரூ.50 ஆயிரம் ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்திலும் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் […]
பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும். தமிழக முதல்வராக பதவியெற்ற பின், சென்னை தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், இன்று முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு அனைத்து பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பெண்களை போல திருநங்கைகளுக்கும் இலவச பச பயண திட்டத்தை அறிவிக்குமாறு […]
திருநங்கை ஸ்மிதா தான் வரைந்த ஓவியத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, 11 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது ஆதரவு கரத்தை நீட்டி வருகிறார். இன்று பெற்றோர்கள் செய்த பாவத்திற்காக பிள்ளைகள் பலனை அனுபவிப்பது போல, பல இடங்களில் தவறான பெற்றோர்களாலும் சில இடங்களில் தங்களது சூழ்நிலை நிமித்தமாகவும் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் அதிகமானோர் உள்ளனர். இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பாங்கு அனைவருக்கும் வந்துவிடுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த மனம் வருவதுண்டு. அந்த வகையில், […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முதன்முறையாக வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை பாரதி கண்ணம்மா. தமிழகத்தில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட முதன்முறையாக திருநங்கை பாரதி கண்ணம்மா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு தேர்தலில் திருநங்கைகளும், மாற்றுப்பாலினச் சிறுபான்மையினரும் போட்டியிடலாம் என்ற நிலை உருவானது. இதையடுத்து மக்களவைத் தேர்தலில் சென்னையில் ஒரு திருநங்கை போட்டியிட்டார். இதனிடையே, மதுரையைச் சேர்ந்த திருநங்கை பாரதி […]
வங்க தேசத்தில், மகளீர் தினத்தன்று, செய்தி வாசிப்பாளராக முதன் முதலாக தாஷ்ணுவா அனன் ஷிஷிர் என்ற திருநங்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். திருநங்கைகள் என்றாலே வித்தியாசமான பார்வையுடன் பார்க்கப்படும் இந்த சமூகத்தில், இன்று திருநங்கைகள் பல துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர். சினிமா துறை, மருத்துவ துறை, கல்வி துறை, ஊடக துறை, காவல்துறை என அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில், வங்க தேசத்தில், மகளீர் தினத்தன்று, செய்தி வாசிப்பாளராக முதன் முதலாக தாஷ்ணுவா அனன் […]
சத்தீஸ்கர் காவல்துறையினர், மாநிலத்தின் 4 மாவட்டங்களில் 13 திருநங்கைகளை கான்ஸ்டபிளாக நியமித்துள்ளனர். 2019-2020 ஆம் ஆண்டிற்கான கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில், சத்தீஸ்கர் காவல்துறையினர், மாநிலத்தின் 4 மாவட்டங்களில் 13 திருநங்கைகளை கான்ஸ்டபிளாக நியமித்துள்ளனர். இதுகுறித்து இயக்குனர் ஜெனரல் டி.எம் அவஸ்தி அவர்கள் கூறுகையில், கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்வுக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திருநங்கைகளை நாங்கள் முதன்முறையாக கான்ஸ்டபிளாக நியமித்துள்ளோம். அவர்களை தனிப்பட்ட முறையில் வாழ்த்துகிறேன் […]
பல ஹோட்டல்களில் பாதிக்கப்பட்டதால், தனது சமூகத்தினருக்கு ஊக்கமளிக்கும் எனும் நம்பிக்கையில், நொய்டாவில் கஃபே திறந்துள்ளார் திருநங்கை பெண்மணி. தற்போதைய காலகட்டங்களில் முன்பு போல பெண்களும் சரி, திருநங்கைகளும் சரி வீட்டுக்குள் முடங்கி கிடப்பது கிடையாது. தங்களுக்கான வாழ்க்கையை துணிந்து வாழ துவங்கி விட்டார்கள். பலர் சாதனைகளும் செய்து வருகிறார்கள். ஆண்களுக்கு இணையாக தங்களாலும் சாதிக்க முடியும் எனவும், சில கொடூரமான குணம் கொண்ட ஆண்களின் சீண்டல்களுக்கு ஆளாகியிருந்தாலும் சாதிக்கும் வெறியுடன் பல திருநங்கைகள் வாழ்ந்து வருகிறார்கள். அது […]