நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாட படும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.
இந்நிலையில் இவர் ஒரு நகைக்கடையின் விளம்பரத்திலும் நடிக்க இருக்கிறார். தற்போது நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருவதால் இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
பிரபல தொலைக்காட்சியான கலர்ஸில் நடிகை நயன்தாரா நம்ம சேனலுக்கு வருகிறார். உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர்.
இதனையடுத்து நயன்தாரா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை எனவே நடக்க இருப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.