பிக் பாஸ் ஆஜித்க்கு கொரோனா தொற்று உறுதி..!!

Famous actor Ajith has been confirmed to have a corona infection by Big Boss.

பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஆஜித்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 2 வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் சினிமா பிரபலங்கள் மக்கள் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஆஜித்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியானதை ஆஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். இதில் ” நான் இந்த வார தொடக்கத்தில் பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரார்த்தனைகளால் எனது உடல் நலம் நன்றாக இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் நெறி முறைகளை பின்பற்றுங்கள் உங்க வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பது இருங்கல். மிக விரைவில் இந்த உலகம் திரும்பி வரவேண்டும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.