ஓடிடி-யில் வெளியாகும் பிக்பாஸ் பிரபலங்களின் திரைப்படங்கள்..!

பிக்பாஸ் மூலமாக பிரபலமானவர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் மூலமாக பிரபலமானவர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா காலத்தில் ஓடிடியில் வெளியாக தொடங்கிய திரைப்படங்கள், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும், தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகிய கவின் மற்றும் ஹரீஸ் கல்யாண் நடித்துள்ள படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஹரீஸ் கல்யாண் நடித்துள்ள ‘ஓமணப்பெண்ணே’ என்ற திரைப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கவின் நடித்துள்ள ‘லிப்ட்’ படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமிர்தா கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node

ஓமணப்பெண்ணே மற்றும் லிப்ட் என்ற இந்த இரண்டு படங்களும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.