ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ‘லால் சலாம்’ என புதிய திரைப்படம் தயாராகவுள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்காக கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, படத்தில் ஒரு சிறிய முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
unknown nodeaishwarya rajinikanth
இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்துக்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்குநராக பணிபுரிகிறார். பிரவீன் பாஸ்கர் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.
unknown nodeVishnu Vishal And Vikranth [Image Source: Twitter]
படத்திற்கான புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில், கிரிக்கெட் விளையாடும் ஹெல்மெட் தீ பற்றி எரிகிறது. அக்கம் பக்கத்தில் உள்ள இடம் கலவரம் நடந்ததுபோல் காட்டப்பட்டுள்ளது. எனவே படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படமாக இருக்கும் என தெரிகிறது.
unknown nodeபடம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று தொடங்கும் என கூறப்படுகிறது.