பாரதி கண்ணம்மா தொடர் வில்லி ஃபரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கென்று பல ரசிகர் கூட்டமும் உள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் கதாநாயகிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் வில்லிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஃபரீனாவுக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற செய்தியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் அறிவித்திருந்தார். இருப்பினும் தொடர்ந்தும் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்பொழுது ஃபரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
View this post on Instagram