நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
unknown nodeஇந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ட்வீட்டர் பக்கத்தில் “பீஸ்ட் அப்டேட் ஆன் தி வே” என பதிவிட்டுள்ளார். கண்டிப்பாக பீஸ்ட் அடுத்த அப்டேட் ரிலீஸ் தேதியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
unknown nodeநெல்சன் திலீப் குமார் கொடுத்த இந்த அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர். நீண்ட நாட்களாக படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. பொறுத்திருந்து என்ன அப்டேட் வருகிறது என்பதை பார்ப்போம்.