பீஸ்ட் படம் கூர்க்கா படத்தின் காப்பி இல்லை – நெல்சன் விளக்கம்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜாஹெக்டே நடித்துள்ளார்.

unknown node

செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, சாம்டைம் சாக்கோ போன்றார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர்.

unknown node

இப்படத்தின் டிரைலர் கடந்த 2-ஆம் தேதி வெளியானது, அதில் இடம்பெற்ற காட்சிகளை வைத்து படம் ஹைஜாக் பற்றிய கதை என்று தெரியவந்தது. அதைபோல் டிரைலர், வெளியான சில நேரத்திலேயே “பீஸ்ட்” திரைப்படம் யோகி பாபு நடிப்பில் வெளியான கூர்கா படத்தின் காப்பி என விமர்சனங்கள் எழுந்தது.

unknown node

இது தொடர்பாக இயக்குனர் நெல்சன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “பொதுமக்கள் அதிகம் நடமாடும் ஒரு ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் கதை ஒன்றும் சினிமாவுக்கு புதிதில்லை இதுபோல பல படங்கள் வந்திருந்தாலும் காட்சிகள் உருவாக்கத்திலும் அவை சொல்லப்படும் விதத்திலும் முற்றிலும் வேறுபடும் என்றும், இந்த மாதிரியான கதைகளில் சில காட்சிகள் ஒரே மாதிரி வருவதும் தவிர்க்க முடியாது. நானும் கூர்கா படத்தை பார்த்துள்ளேன், கூர்கா படம் மற்றும் மணி ஹெய்ஸ்ட் தொடருக்கும் பீஸ்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என தெரிவித்துள்ளார்.