இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
unknown nodeடார்க் காமெடி கலந்த ஆக்சன் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
unknown nodeஇந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் அட்டகாசமான பீஸ்ட் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஅதற்கு அடுத்த தினத்தில் யாஷ் நடிப்பில் கேஜிஎப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. இரண்டு திரைப்படங்களில் எந்த படம் அதிகம் வசூல் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
unknown node