பீஸ்ட் ஆக்‌ஷன் பட்டையக் கிளப்பும்.! நெல்சன் கூறிய தகவல்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

unknown node

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு ஹிந்தி, மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகிறது.

unknown node

இந்த நிலையில், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பீஸ்ட் படம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” விஜய் சார் படம்னா அதுக்கு என்ன மாதிரி எதிர்பார்ப்பு இருக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும். படத்திற்காக மிகவும் கடினகமாக ரசிச்சு வேலை செஞ்சிருக்கோம்.

unknown node

இந்த படத்திற்கு முன்பு நான் எடுத்த முந்தைய படங்களான ‘கோலமாவு கோகிலா’ மாதிரியோ ‘டாக்டர்’ போலவோ ‘பீஸ்ட்’ படம் கிடையாது. இது டோட்டலாகவே வேறமாதிரி ஒரு படம். கலகலப்பான காமெடியும் இருக்கும்…கண்டிப்பாக ஆக்‌ஷன் பட்டையக் கிளப்பும்.இதுவரைக்கும் வந்த என்னோட படங்களை மனசுல வச்சு, ‘பீஸ்ட்’டைப் பார்க்கும்போது அந்த வித்தியாசம் உங்களுக்கு நல்லாத் தெரியும்” என கூறியுள்ளார்.

பீஸ்ட் ஆக்‌ஷன் பட்டையக் கிளப்பும்.! நெல்சன் கூறிய தகவல்.!