ஆணும் பெண்ணும் பழகினால் காதல் கிடையாது என்ற பாலாஜி.! குறுக்கிட்டு கலாய்த்த கமல் .!

Kamal Haasan interrupts Balaji to tell Balaji that there is no love if a man and a woman get attached to each other.

ஆணும் பெண்ணும் ஒன்றாக பழகினால் காதல் கிடையாது என்று பாலாஜி கூற கமல்ஹாசன் அவர்கள் குறுக்கிட்டு பாலாஜியை கலாய்த்து விடுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் .அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் . அந்த வகையில் நேற்றைய தினம் நாமினேஷன் பட்டியலில் இருந்து ஆரி மற்றும் ரியோ அதிக வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டனர் .

இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் இன்றுடன் பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி 50 நாட்கள் நிறைவடைகிறது .எனவே இந்த 50 நாளில் பிக்பாஸ் வீட்டில் உங்களின் பங்களிப்பு என்ன என்று ஒவ்வொரு போட்டியாளரும் சுருக்கமாக முன் வந்து கூற வேண்டும் என்று கமல்ஹாசன் கூறுகிறார்.அப்போது முதலில் பாலாஜி முன் வர இந்த வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், எப்படி நடந்து கொள்ள கூடாது என்றும் சொல்லி கொடுத்திருக்கேன் .ஆணும் பெண்ணும் ஒன்றாக பழகினால் அது காதல் இல்லை என்றும் சொல்லி கொடுத்திருக்கேன் என்று பாலாஜி கூற ,அப்போது கமல்ஹாசன் பாலாஜி நீங்க வேகமாக எண்ணுகிறீர்களா இல்லையே என்று குறுக்கிட்டு பேசுகிறார் .இதற்கு போட்டியாளர்கள் அனைவரும் சிரிக்கின்றனர் .

unknown node