பிஸ்கோத் திரைப்படத்தின் "பேபி" பாடல்..!

சந்தானம் நடித்துள்ள "பிஸ்கோத்" திரைப்படத்திலிருந்து பேபி என்ற பாடல் வெளியாகியுள்ளது.

சந்தானம் நடித்துள்ள “பிஸ்கோத்” திரைப்படத்திலிருந்து பேபி என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தில் இசையமைப்பாளர் ராதான் இசையமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படத்தின் மற்ற வேலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடவுள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தனர். அதன் படி தற்போது பேபி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த சந்தானம் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

unknown node