திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 'அய்யப்பனும் கோஷியும்' பட இயக்குநர்.!

அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் சச்சி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் சச்சி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

சச்சிதானந்தன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். மேலும் கவுரி நந்தா, அன்னா ராஜன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 50கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்வதாகவும், அதனை வெற்றி படமான ஜிகர்தண்டா படத்தை தயாரித்த ஃபை ஸ்டார் கதிரேசன் அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் தமிழின் முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அய்யப்பனும் கோஷியும் படத்தின் இயக்குனரான சச்சிதானந்தன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திருச்சூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு திடீரென உடல்நலக்குறைவால் மலையாள சினிமாயுலகம் அதிர்ச்சியில் உள்ளது. மேலும் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 'அய்யப்பனும் கோஷியும்' பட இயக்குநர்.!