அட்லியுடன் இணையும் தெலுங்கு ஹீரோ...!

தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டு வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் அட்லி. இவர் தமிழ் சினிமாவில் "ராஜா ராணி" படத்தின் மூலம் தனது திரையுலக

தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டு வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் அட்லி. இவர் தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். இவர் தனது முதல் படத்திலே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார். இதன் பின் இளைய தளபதி விஜயுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார். சமீபத்தில் அட்லி ஷாருக்கான் உடன் இணைவதாக ததவல் வெளிவந்தது. ஆனால், தற்போது தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆர்., அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.