பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தனது வி கிரியேஷன் தயாரிக்க உள்ளார். இந்த படத்ததின் அறிவிப்பு அண்மையில் வெளியானது.
இந்த படத்தின் ஷூட்டிங் நாளை முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதே போல தற்போது அசுரன் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடபப்ட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
DINASUVADU