இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
unknown nodeஇந்த படத்தில் சித்தி இத்னானி, கயாடு லோஹர், நீரஜ் மாதவ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதுவரை இல்லாத விதமாக கெளதம் மேனன் வித்தியாசமான கதைக்களத்தை படமாக எடுத்துள்ளார். சிம்புவும் வித்தியாசமான ஒரு புது கெட்டிப்பில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்களேன்-ஐயோ.. கவர்ச்சியில் இப்படி இறங்கிடீங்களே… தர்ஷாவின் அந்த போட்டோகளை பார்த்து தறிகெட்டு திரியும் ரசிகர்கள்….
unknown nodeஇதனால் என்னவோ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்றே கூறலாம். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ஆல்பமும், டிரைலரும் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
unknown nodeஅதன்படி, தற்போது படத்திற்கான டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகள் மற்றும் சிம்புவின் நடிப்பு, எ.ஆர்.ரஹ்மானின் துல்லியமான பின்னணி இசை காண்போரை வெகுவாக ஈர்த்துள்ளது என்றே கூறலாம். மேலும் ட்ரைலரில் சிம்புவின் நடிப்பை பார்த்த பலரும் நடிப்பின் அசுரன் என கருத்துக்களை பதிவிட்டு படத்தை பார்க்க காத்திருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.
unknown node