ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் ஆர்யாவின் "டெடி".!

The Teddy movie starring Arya and Saiyasha has been announced to be released live on the OTT site Hotstar.

ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள டெடி திரைப்படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி .நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தினை இயக்குகிறார்.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் ,பிரபல நடிகையுமான சாயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் சதீஷ், கருணாகரன்,சாக்ஷி அகர்வால், இயக்குனர் மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் .

டி.இமான் இசையமைத்துள்ள இந்த படமானது காமெடி கலந்த திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தினை ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் டெடி படத்தினை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே வெளியான சூரரை போற்று ,அந்த காரம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

unknown node