ஹீரோவா...? வில்லனா...? மிரட்டலாக வெளியான "எனிமி" படத்தின் ஆர்யா லுக்..!

Arya's first look poster for the upcoming Enemy movie starring Vishal and Arya has now been released.

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தில் ஆர்யாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக ‘எனிமி’ எனும் படத்தில் இணைந்து நடித்து வருகின்றார். இந்த படத்தினைஆனந்த் ஷங்கர் இயக்குகிறார்.ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் கருணாகரன்,தமிபி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாலினி ரவி நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது .

அதனை தொடர்ந்து படத்தில் நடிகர் விஷாலுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஆர்யாவுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகி வருகிறது.

unknown node
ஹீரோவா...? வில்லனா...? மிரட்டலாக வெளியான "எனிமி" படத்தின் ஆர்யா லுக்..!