இந்தியில் ரீமேக்காகும் 'அருவி'.!

It has been announced that the hugely successful Aruvi movie starring Aditi Balan is currently in remake in Hindi.

அதிதி பாலன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அருவி திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ‘அருவி’.பிரபல தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு தயாரித்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஷூல்’ என்கிற திரைப்படத்தை இயக்கிய ஈ.நிவாஸ் என்பவர் இயக்கும் இந்த படத்தில் அதிதி பாலன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஃபாத்திமா சனா ஷேக் நடிக்கவுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை அப்பிளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ஃபெயித் பிலிம்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node