பழனியில் படப்பிடிப்பை தொடங்கிய AV33 படக்குழு..!!

The first phase of shooting for Arun Vijay's 33rd film has started in Palani yesterday.

அருண் விஜய்யின் 33 வது படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு பழனியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33 வது படத்தில் நடித்துவருகிறது. இந்த படம் இயக்குனர் ஹரிக்கு 16 வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார்,ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார்கள். இந்த படத்திற்கான பூஜை கடந்த 3 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு பழனியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு தூத்துக்குடி, காரைக்குடி, சென்னை ஆகிய மாவட்டங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் இந்த படத்திற்கான டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node