ஆரியின் வெற்றி ஒவ்வொரு கடின உழைப்பாளிகளுக்கு பெருமை – இயக்குனர் சேரன்!

Cheran has posted on his Twitter page that the success of a socially responsible honest man is a source of pride for every hard worker.

சமூகப் பொறுப்புள்ள நேர்மையான மனிதனின் வெற்றி ஒவ்வொரு கடின உழைப்பாளிகளுக்கும் பெருமை என இயக்குனர் சேரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு நேற்று நிறைவடைந்துள்ள நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 4. இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரி அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், இவரது வெற்றியை பலரும் கொண்டாடுவதுடன் இவருக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கடந்த வருடம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் தமிழ் திரையுலக இயக்குனரும், நடிகருமான சேரன் அவர்கள் இது குறித்த பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆரியின் வெற்றி ஒவ்வொரு பொறுப்புள்ள குடும்ப பிள்ளைகளின் வெற்றி எனவும், ஒவ்வொரு சமூக பொறுப்பாளனும் நேர்மையான மனிதர்களின் வெற்றியும் கடின உழைப்பாளிகளுக்கு பெருமை சேர்க்கும், வாழ்த்துக்கள் ஆரி அர்ஜுனன் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node