நகைச்சுவை நல்லா இல்லைன்னு சொல்லாதீங்க.!நிஷா குறித்து அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ்.!

Don’t say Nisha’s comedy is not good, it will affect her career, says Archana.vel brothers group discuss about Nisha.Here is the promo video

நிஷாவின் நகைச்சுவை நன்றாக இல்லை என்று சொல்லாதீர்கள்,அது அவரது கேரியரை பாதிக்கும் என்று அர்ச்சனா கூறுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் வேல் பிரதர்ஸ் குரூப்பில் உள்ள அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ்,ரியோ மற்றும் சோம் ஆகியோர் இணைந்து நிஷா குறித்து பேசுகின்றனர்.

அப்போது நிஷாவிடம் நகைச்சுவை நல்லா இல்லை என்று சொல்லாதீர்கள் என்றும், நகைச்சுவை நல்லா இருந்தா கேளுங்க , இல்லையெனில் அங்கிருந்து எழும்பி போய் விடுங்கள்.அதை விட்டுட்டு நல்லா இல்லைன்னு சொல்லாதீங்க , ஏனெனில் நாம் அவ்வாறு கூறுவது அவரது அடுத்த ஐந்தாறு வருட கேரியரை பாதிக்கும் என்று அர்ச்சனா கூறுகிறார்.

அதே போன்று ஜித்தன் ரமேஷ் நிஷாவிடம் ஒருமுறை,இருமுறை கூறலாம் மூன்றாவது முறை அவராகவே புரிந்து நடந்து கொள்ள வேணாமா,எப்போது தான் அவருக்கு தெரிய வரும் என்று நிஷா குறித்து கூறுகிறார்.இந்த உரையாடலில் சோம் மற்றும் ரியோ ஆகியோர் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர் .இதோ அந்த வீடியோ

unknown node