A. R. Rahman: இயக்குனர் மனோஜ் என்.எஸ் இயக்கத்தில் பிரபுதேவா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருவரும் சமூக வலைதள பக்கத்தில், ஒரு தனித்துவமான போஸ்டரையும் பகிர்ந்து கொண்டனர்.
READ MORE –ரஜினியின் ஹிட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நக்மா! இப்படி பண்ணிட்டீங்களே மேடம்!
பிரபுதேவா நடிக்கும் இந்த புதிய படத்துக்கு 25 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கடைசியாக காதலன் (1994) மற்றும் மின்சரா கனவு (1997) ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினர்.
ஜென்டில்மேன் படத்தின் ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயில்’ பாடல் மூலம் திரையில் முதன் முறையாக தோன்றிய பிரபுதேவா. இதையடுத்து காதலன் படத்தில் நாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தார், பின்னர் இயக்குனராகவும் அவதாரமெடுத்தார்.
READ MORE –உதவி கேட்ட பாட்டி! ஓட்டுப்போட சொன்ன கேப்டன் விஜயகாந்த்..காரணம் என்ன?
தற்காலிகமாக ‘ARRPD6’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபுதேவா தவிர நடிகர்கள் யோகி பாபு, அஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
