ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து மோகினி தே விவகாரத்துடன் தொடர்பா? மௌனம் கலைத்த வழக்கறிஞர்!
ரஹ்மான் விவாகரத்து மற்றும் மோகினி தே விவாகரத்து அறிவிப்பு ஒரே நேரத்தில் வெளியான காரணத்தால் பலர் இணைத்து பேசிய நிலையில் வழக்கறிஞர் இந்தக் கருத்தை முற்றிலும் மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவருடைய மனைவி இருவரும் விவாகரத்து செய்துகொள்வதாக தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் நேற்று கனத்த இதயத்துடன் அறிவித்து இருந்தார்கள். இவர்களுடைய விவாகரத்து திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More- மனைவியுடன் தேனிலவுக்கு சென்று வேறொரு அறையில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான்! உண்மையை உடைத்த பிரபலம்!
இந்த சுழலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய விவாகரத்து செய்தி அறிவித்த சில மணி நேரங்களில் அவருடைய இசைக்குழுவை சேர்ந்த மோகினி தே என்ற பெண் தன்னுடைய கணவரை விவகாரத்து செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, இருவருடைய விவாகரத்துக்கு எதாவது காரணம் இருக்கிறதா? என்கிற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்தது.
இதனையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கி கொடுத்த வழக்கறிஞர் வந்தனா ஷா இருவருடைய விவகாரத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என கூறி விளக்கம் கொடுத்துள்ளார். ரிபப்ளிக் டிவியுடன் நடைபெற்ற உரையாடலில், வழக்கறிஞர் வந்தனா ஷா, “இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. சாயரா மற்றும் ரஹ்மான் இந்த முடிவை அவர்களே தனிப்பட்ட முறையில் எடுத்துள்ளனர்.
மற்றபடி பரவும் தகவலை போல ரஹ்மான் விவாகரத்துக்கும் மோகினி தே விவாகரத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ரஹ்மான் மற்றும் சாயரா பானுவின் பிரிவில் இப்போது வரை நிதி குறித்து எந்த விவாதங்களும் நடைபெறவில்லை. இருவரும் கலந்து பேசி நட்புரீதியாக இந்த முடிவை எடுத்துள்ளார்கள்” எனவும் வழக்கறிஞர் வந்தனா ஷா விளக்கம் அளித்தார்.