தனுஷின் கர்ணன் படத்தினை ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளதுடன் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு டீசர் வெளியீட்டு தெரிவித்தனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஏப்ரல் மாதம் எந்த தினத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை இன்று காலை 11.06 மணிக்கு வெளியாகும் என்று நேற்று படக்குழுவினர் அறிவித்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது . தலையில் ரத்த காயங்களும் ,கையில் கைவிலங்குடனும் நிற்கும் தனுஷின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் கர்ணன் படத்தினை ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர் .இதனை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருவதுடன் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown node