பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாததால் யூடியூப் சேனலில் திரை விமர்சனங்கள் செய்துவருகிறார்.
unknown nodeதிரைசினிமா குறித்த செய்திகள், நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்தும் அதிகம் பேசி வருகிறார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் குறித்தும், நடிகை அபிராபி, சிம்ரன் ஆகியோரையும் தொடர்பு படுத்தி இவர் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
unknown nodeஇந்த நிலையில் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த சோனியா என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் , பயில்வான் ரங்கநாதன் என்பவர் பெண்கள் குறித்தும், உடல் உறுப்புகள் குறித்தும் ஆபாசமாக பேசி வருகிறார். உடனடியாக அவரை கைது செய்யவேண்டும் என கூறியுள்ளார்.
unknown nodeஇதற்கு முன்பாக இணையத்தில் அவதூறாக பேசியதாக 8 பேர் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்போது பயில்வான் ரங்கநாதன் மீதும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.