தமிழ்நாடு இயக்குனர்கள் சங்க தேர்தல் பதவிக்கு மனுதாக்கல்!

Default Image

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் வரும் 10-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட சங்கத்தின் அவசர கூட்டத்தில் தேர்தலை வரும் 14-ம் தேதிக்கு பதிலாக 21-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மற்ற பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள், தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், மனுக்களை திரும்ப பெற 12-ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், ஜூலை 13-ல் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு என்றும், வரும் 21-ம் தேதி வடபழனி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்