பிரமாண்ட படங்களை தயாரித்த நிறுவனத்தின் அடுத்த படத்தில் அனுஷ்கா.!

Actress Anushka is all set to star in Radhe Shyam's upcoming film UV Creations after a long hiatus.

நடிகை அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராதே ஷியாம் படத்தினை தயாரித்து வரும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார், அனுஷ்கா.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நிசப்தம் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.அதனையடுத்து படங்களில் நடிக்காமல் உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது கமிட்டாகியுள்ள படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது நடிகை அனுஷ்கா அடுத்ததாக பி.மகேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் தெலுங்கில் ரா ரா கிருஷ்ணய்யா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் , தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படமானது வித்தியாசமான கதைக்களத்தில் குடும்ப படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது .

மேலும் இந்த படத்தினை பிரபல தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிறுவனம் ஏற்கனவே பிரபாஸின் சாஹோ படத்தினை தயாரித்துள்ளதும் , தற்போது பிரபாஸின் ராதே ஷியாம் படத்தினை தயாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.