வேற லெவல்! துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த லெவலுக்கு முன்னேறிய தல அஜித்.!அனைத்திலும் தல மாஸ் தான்.!

Thala Ajith has gone to the next stage in the shooting competition to be held in Tamil Nadu.

தமிழக அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் தல அஜித் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித்.எச்.வினோத்தின் வலிமை படத்தில் நடித்து வரும் இவர் விரைவில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக வெளிநாடு செல்லவுள்ளார் .

நடிப்பில் ஒருபுறம் மாஸ் காட்டி வரும் தல அஜித் தனக்கு பிடித்த விஷயங்களை செய்து மற்றவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வருகிறார் . அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் உள்ள ரேபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் .அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தல அஜித் தமிழ்நாடு அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.மார்ச் 2 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான அடுத்த லெவலுக்கு தல அஜித் தகுதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இது சமுக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருவதுடன் தல ரசிகர்கள் டிரெண்ட் செய்தும் வருகின்றனர்.

unknown node