ஓடிடியில் வெளியாகும் கர்ணன்..!! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

The Karnan movie starring Dhanush will be released on May 8 on Amazon Frame.

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் வருகின்ற மே 8 ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியங்கா, சந்திரமௌலி, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது, அதாவது வருகின்ற மே 8 ஆம் தேதி இந்த திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.

ஓடிடியில் வெளியாகும் கர்ணன்..!! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!