நடிகை நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான், ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கு கடந்த மாதம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இருவரும் தேனிலவுக்காக தாய்லாந்த் என பல நாடுகளுக்கு சென்றார்கள்.
unknown nodeஇதனை தொடர்ந்து, இருவரும் மீண்டும் தங்களுக்கான படங்களின் வேளைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது நயன்தாரா நடிக்கவுள்ள அவரது 75-வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவாக வெளியாகியுள்ளது.
unknown nodeஅதன்படி, நயன்தாராவின் 75-வது படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். படத்தை ஜி ஸ்டுடியோஸ், ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இரண்டு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
unknown nodeஇப்படத்தில் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி மேலும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏற்கனவே ஜெய், சத்யராஜ், நயன்தாராவுடன் ராஜா ராணி படத்தில் நடித்திருந்ததால், இந்த படம் ராஜா ராணி 2 வா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்டது.
Announcing #ladySuperstar75 ????
Zee Studios is excited to collaborate with #Nayanthara for her 75th film! ????????
The shoot will begin soon! ????#Jai #SathyaRaj @Nilesh_Krishnaa @dineshkrishnanb @tridentartsoffl @Naadstudios pic.twitter.com/nVVCnLek83— Zee Studios (@ZeeStudios_) July 12, 2022