அண்ணா என் கனவு நிறைவேறியது.! நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட ரோலக்ஸ்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள், கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் "விக்ரம்".

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள், கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “விக்ரம்”. அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்  இசையமைத்துள்ளார்.

unknown node

ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல விக்ரம் படமும் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டவரை பார்க்கிறேன். படம் மிகவும் அருமையாக இருக்கிறது விக்ரம் 3 பார்ட்டுக்கு வெயிட்டிங் என தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

படத்தின் இறுதிக்காட்சி 7 நிமிடத்தில் மட்டும் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வருவார். அந்த 7 நிமிட காட்சியை பார்த்த ரசிகர்கள் திரையரங்கில் கை தட்டகள் நிற்கவே இல்லை. அந்த அளவிற்கு கொடூர வில்லனாக சூர்யா மிரட்டி இருந்தார்.

unknown node

இந்த நிலையில், ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து சூர்யா ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் ” அன்பே கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது. உங்களுடன் திரையுலகில் வரும் கனவும் நினைவாகியுள்ளது. இதைச் செய்ததற்கு இயக்குனர் லோகேஷ்கனகராஜிற்கு நன்றி. விக்ரமின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் காதல் நிரம்பி வழிகிறது.” என பதிவிட்டுள்ளார்.

அண்ணா என் கனவு நிறைவேறியது.! நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட ரோலக்ஸ்.!