திருமணம் எப்போது..? ‘நச்’ பதில் கொடுத்து ரசிகர்களை சந்தோசமாக்கிய அஞ்சலி.!

Default Image

நடிகை அஞ்சலி 36-வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதானால் பலரும் இவரிடம் எப்போது உங்களுக்கு திருமணம் என்ற கேள்விகள் தான் கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சமீபத்தில் அஞ்சலி திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அஞ்சலி தற்போது  ‘Fall’ என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். விரைவில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் உங்களுக்கு எப்போ திருமணம் என்ற கேள்வி கேட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்- இவர் உழைப்பெல்லாம் வீணாக போனதே… அதிர்ஷ்டமில்லா சியான் விக்ரம்.! மொத்த லிஸ்ட் இதோ…

அதற்கு பதில் அளித்த அஞ்சலி “என்னுடைய திருமணத்தை பற்றி வீட்டில் அடிக்கடி கேட்பார்கள். பிறகு என் சினிமா வாழக்கையை புரிந்து கொண்டு அதைப்பற்றி பேசி எனக்கு அழுத்தம் கொடுக்கமாட்டார்கள். முன்னாடியெல்லாம், ஒரு நடிகைக்கு திருமணம் முடிந்தால் அந்த நடிகைகள் சினிமாவிற்கு நடிக்க வரமாட்டார்கள், இப்போது அப்படியெல்லாம் கிடைத்து அந்த நிலை மொத்தமாகவே மாறிவிட்டது.

இப்போது நான் இருக்கும் நிலைமையில் என்னுடைய திருமணத்தை பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை. ஆனால், அதற்காக திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கமாட்டேன். கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். என்னுடைய திருமணத்தை ரகசியமா நான் வைக்க மாட்டேன் எல்லோருக்கும் அறிவித்துவிட்டு தான் செய்துகொள்வேன்” என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் திருமண செய்தியை அறிவிப்பார் என்று கூறியதால் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்