நடிகை அஞ்சலி தற்போது ஆரம்ப காலத்தை போல பல படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சில முக்கியமான படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழுமலை படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில், இவர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல் உண்மையா என்பது தெரியாமல் இருந்த நிலையில், தற்போது இதற்கு நடிகை அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். […]
தூத்துக்குடியில், சுனாமி பேரலை தாக்கிய 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி பேரலை தமிழகத்தை தாக்கியது. இந்த சுனாமி தாக்குதல் பலர் உயிரிழந்த நிலையில், பலர் தங்களது உறவுகளையும் உடைமைகளையும் இழந்தனர். இந்த நிலையில், சுனாமி பேரலை தாக்கிய 18-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தூத்துக்குடியில், சுனாமி பேரலை தாக்கிய 18ம் ஆண்டு […]
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி 60 நாட்கள் எட்டியுள்ள நிலையில், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் சண்டை மற்றும் காமெடியான சில விஷயங்களை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார்கள். இந்த வாரம் வீக்லி டாஸ்க்கிற்காக வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் காமெடியான கெட்டப்கள் போட்டுள்ளனர். இதனை பார்க்கையில் வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம். ஆனால், இந்த வாரம் பெரிய சோகம் என்னவென்றால், இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளார்கள். இதுவரை குறைவான வாக்குளை பெற்றுள்ள ஆயிஷா மற்றும் ராம் ஆகியோர் வீட்டை விட்டு […]
நடிகை அஞ்சலி 36-வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதானால் பலரும் இவரிடம் எப்போது உங்களுக்கு திருமணம் என்ற கேள்விகள் தான் கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சமீபத்தில் அஞ்சலி திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அஞ்சலி தற்போது ‘Fall’ என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். விரைவில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் உங்களுக்கு எப்போ திருமணம் என்ற […]
மதுரை விமான நிலையம் வந்தடைந்த லட்சுமணன் உடலுக்கு அமைச்சர்கள், ராணுவ வீர்ரகள் மரியாதை. ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான இவர் மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை சேர்ந்தவர்.இவரது இரங்கல் தெரிவித்து […]
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு அவர்களது உறவினர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். நேற்று பிற்பகல் குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, இன்று மாலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சிறப்பு ராணுவ விமானம் மூலம் முப்படை தலைமை தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேரின் உடல்கள் டெல்லி வந்தடைந்துள்ளது. […]
வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், முப்படை தளபதி பிபின் […]
சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தற்போது மரியாதை செலுத்துகின்றனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை கடைபிடிக்க சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அதிமுக தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் தற்போது சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் […]
சென்னை:ஊழல் ஒழிப்பைத் தனது நெஞ்சில் சுமந்து,நேர்மையோடு நியாயத்தை நிலைநாட்டிய காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவு பேரிழப்பாகும் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை முன்னாள் எஸ்.பி நல்லம்ம நாயுடு. இவருக்கு வயது 83. இவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னை பெரவள்ளுரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இதனையடுத்து,அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில்,அவரது இல்லத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் […]
நடிகர் சூர்யா அவர்கள், புனீத் ராஜ் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். கன்னட திரையுலகின் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வாரம் தனது வீட்டில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நெஞ்சு வலி காரணமாக கீழே சுருண்டு விழுந்தார். இதனை அடுத்து பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். பின் அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]
வாழ்க்கை பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்த நிலையில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்கிற எண்ணத்துடன் திரையுலகிற்கு வந்துள்ள அஞ்சலிக்கு கீதாஞ்சலி 2 எனும் பேய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் பிறந்த அமெரிக்காவை சேர்ந்த இயக்குனர் ஒருவர் இந்த படத்தை இயக்க உள்ளார். தமிழில் `காளி’ ரிலீசுக்கு பிறகு அஞ்சலி நடிப்பில் `பேரன்பு’, `நாடோடிகள்-2′ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. அஞ்சலி தற்போது ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் ‘லிசா’ என்ற திகில் படத்தில் நடித்து […]