முதன்முதலாக வாத்தி கமிங் பாடலின் Beat-யை கேட்டு தெறிக்கவிட்ட அனிருத்.!

மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கமிங் பாடலை முதல் முறையாக கேட்டதும் அனிருத்தின் மாஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கமிங் பாடலை முதல் முறையாக கேட்டதும் அனிருத்தின் மாஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது . குறிப்பாக விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலும், வாத்தி கமிங் பாடலும் பெரிய அளவில் ரீச்சானது . தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது . திரையரங்குகள் திறக்கப்பட்டதும் முதலில் வெளிவரும் திரைப்படமாக மாஸ்டர் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளரான அனிருத் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்திலுள்ள ஒரு மாஸ்ஸான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது வாத்தி கமிங் பாடலை இசையமைத்து முடித்தவுடன், அந்த பாடலின் தாறுமாறான மியூசிக்கை கேட்டு அனிருத் மற்றும் குழுவினர் உற்சாகமாக ஆடுகிறார்கள். தற்போது அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

unknown node