தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகும் தல அஜித்தின் ரீல் மகள் அனிகா.!

It is said that the Malayalam movie Kappella will be remade in Telugu with Anika Surendran as the heroine.

மலையாளத்தில் வெளியான கப்பேல்ல படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் ,அதில் அனிகா சுரேந்திரன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.தல அஜித்துடன் விஸ்வாசம் ,என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . வழக்கமாக முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் நடத்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைப்பார் .அந்த போட்டோஷூட் எல்லாம் ஒரு ஹீரோயின் வாய்ப்புக்காக தான் . தற்போது அது நிறைவேறியுள்ளது .

இந்தாண்டு மார்ச் மாதத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் “கப்பேல்ல”.இதில் அன்னா பென் , ஸ்ரீநாத் பாசி ,ரோஷன் மாத்யூ,தான்வி ராம் ,முஸ்தபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் .முகமது முஸ்தபா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.அதனையும் முகமது முஸ்தபா தான் இயக்கவுள்ளாராம் . தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் இந்த படத்தில் அன்னா பென் நடித்த கதாபாத்திரத்தில் அனிகா சுரேந்திரன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.