பிரபல பாடகருடன் அமலாபால் காதலா?

Default Image

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் மைனா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் இவர் ஆடை என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்து இருந்தார். இவரது இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களும், நேர்மறையான விமர்சனங்கள்  எழுந்தது. ஆனாலும் பல பிரபலங்கள் இவரை பாராட்டி தான் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து சமீபத்தில் இவர் தனது காதலர் குறித்த தகவல்களை கூறியிருந்தார். அதன்படி மும்பையை சேர்ந்த பாடகர் பவீந்தர் சிங் என்பவரை காதலிப்பதாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் அமலாபாலுக்கு புகைப்படங்களை தனது இணையப்பக்கத்தில் இருந்து நீக்கிய இவர், பின்னர் அதனை மீண்டும் பதிவிட்டு வருகிறார். இதனை பார்த்த  ரசிகர்கள் பலரும், அமலாபாலுடன் காதலில் இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்